இஷான் கிஷனுக்கு இத்தனை கோடியா..?

ஐபிஎல் 2022 போட்டிகளுக்கான மெகா ஏலம் இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் எந்த ஆண்டு புதிதாக அறிமுகமாகியுள்ள இரண்டு அணிகள் உட்பட மொத்தம் 10 அணிகள் பங்கேற்று தங்களுக்கான வீரர்களை ஏலத்தில் வாங்கி வருகின்றனர். இதுவரை ஏலம் போன வீரர்களில் அதிகபட்சமாக கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய இஷான் கிஷன் அந்த அணியினாலேயே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளார். அவரை 15.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. கடந்த 2018 முதல் அவர் மும்பை அணியில் விளையாடி வருகிறார். 

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பிரிவில் அவரை ஏலத்தில் எடுக்க அணிகளுக்கு இடையே கடுமையாக போட்டி நிலவியது. இறுதியில் அவரை மும்பை அணி ஏலத்தில் எடுத்தது.

Leave a Reply

Your email address will not be published.