இனி பொது இடங்களில் மாஸ் அணியத்தேவையில்லை… வெளியானது அதிரடி அறிவிப்பு!

இத்தாலியில் இனி பொதுவெளியில் மாஸ்க் அணியதேவையில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இத்தாலியில் கொரோனா பரவல் அதிகரித்தை தொடர்ந்து அக்டோபர் 2020ம் ஆண்டு முதல் பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம் என்ற அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டது. கோவிட் நோய்த்தொற்றுகள் குறைந்துவிட்டதால், ஜூன் பிற்பகுதியிலிருந்து டிசம்பர் 2021 வரை ஆறு மாதங்களுக்கு இந்த விதி ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த குளிர்காலத்தில் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், பொது இடங்களில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டது.
பிப்ரவரி 8 ஆம் தேதி சுகாதாரத்துறை அறிவிப்பின் படி, பிப்ரவரி 11 ஆம் தேதி முதல் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு நீக்கப்படுவதாகவும், இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பொருந்தும் என துணை சுகாதார அமைச்சர் ஆண்ட்ரியா கோஸ்டா அறிவித்திருந்தார்.
இருப்பினும் தற்போது மார்ச் 31ம் தேதி வரை மட்டும் பொது இடங்களில் மாஸ்க் அணியும் படியும், அதற்கு பின்னர் மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயம் இருக்காது என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.