ஒரு வழியா திறந்துட்டாங்கப்பா ….. மழலையர் பள்ளிகள் மீண்டும் திறப்பு

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவிலிருந்து மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்த பெருந்தொற்றை தடுக்க இந்தியாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து 8 மணி நேரம் குழந்தைகள் ஸ்மார்ட்போன் ஸ்கிரீன்களை பார்ப்பதால், அவர்களது உடல்நலம் பெரிதும் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததால்,கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதே போல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், கொரோனா நிலவரம் மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதை அடுத்து, பல்வேறு தளர்வுகளுடன் அமலில் உள்ள ஊரடங்கை வரும் மார்ச் மாதம் 2 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக, வரும் 16 ஆம் தேதி முதல், நர்சரி பள்ளிகள் (LKG, UKG) மற்றும் மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools) திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.