இனி 3 வயசு குழந்தைகளுக்கும் கட்டாயம்… அரசு அதிரடி உத்தரவு!

இந்தியாவில் இனி இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4வயதுக்கு குறைவான குழந்தைகள் கூட ஹெல்மேட் அணியவேண்டும் என்ற உத்தரவு வெளியாகியுள்ளது.
4 வயதுக்கும் கீழான குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்துள்ள ஒன்றிய அரசு, புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன் படி இரு சக்கர வாகனத்தில் நான்கு வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளைக் கொண்டு செல்லும்போது மணிக்கு நாற்பது கிலோமீட்டருக்கும் குறைவான வேகத்தில் தான் செல்ல வேண்டும் என ஒன்றியச் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இரு சக்கர வாகனத்தில் நான்கு வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளைக் கொண்டு செல்லும்போது பாதுகாப்புக் கச்சையும், தலைக்கவசமும் பயன்படுத்த வேண்டும்.
இந்தப் புதிய விதிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் நாள் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் அளவுக்கு ஏற்றார் போல் அளவுகளை மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய ஹெல்மேட்டை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது.