வெற்றி, தோல்வியை தீர்மானித்த ‘ஒத்த ஒட்டு’… த்ரில்லிங்கான தேர்தல் முடிவுகள்!

பாஜக மீண்டும் ஒற்றை வாக்கு வாங்கி ‘ஒத்த ஒட்டு கட்சி’ என்பதை நிரூபித்துள்ளது. இந்த முறை பாஜக மட்டுமல்லாது, அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் ஒரு வாக்கு கூட பெறாமல் நெட்டிசன்களுக்கு கன்டென்ட் கொடுத்துள்ளனர்.

  • ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சியில் 11வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நரேந்திரன் ஒரே ஒரு ஓட்டி வாங்கி டெபாசிட் இழந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒத்த ஓட்டு வாங்கிய நிலையில், இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக வேட்பாளர் ஒருவர் ஒற்றை வாக்கு வாங்கியது சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டது. அதேசமயத்தில் விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பேரூராட்சி 6 வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நிரோஷா ஒரு வாக்கு கூட பெறாமல் தோல்வியை தழுவினார்.
  • புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி பேரூராட்சி 7வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இப்ராம் ஷா ஒரு ஓட்டு கூட பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்ராம் ஷாவின் உறவினர் சுயேட்சையாக போட்டியிட்டதால் அவருக்கு அனைத்து வாக்குகளும் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
  • ஈரோடு மாவட்டம் பெருந்துரை ஊராட்சியில் 10வது வார்டில் போட்டியிட்ட அமமுக வேட்பாளரான சண்முகம் ஒரு வாக்கு கூட பெறாமல் டெபாசிட் இழந்தார்.
  • சிவகங்கை நகராட்சி தேர்தலில் முதலாவது வார்டில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செங்கோன் என்பவர் ஒரு வாங்கு கூட வாங்கவில்லை.
  • சத்தியமங்கலம் நகராட்சியில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி பாஜக வேட்பாளர் வெற்றி வாகை சூடியுள்ளார். 8வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரான உமா என்பவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கொண்டார்.
  • நாமக்கல் பாண்டமங்கலம் பேரூராட்சியில் 3வது வார்டில் போட்டியிட்ட திமுக சேட்பாளர் 189 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், அதிமுக வேட்பாளர் செல்வி 190 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
  • திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி 1வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட இளம் வேட்பாளரான சுகன்யா ஒரு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளரான வினிதா 453 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், திமுக வேட்பாளர் சுகன்யா 454 வாக்குகள் பெற்று வெற்றி வாகைசூடினார்.

Leave a Reply

Your email address will not be published.