மநீம வேட்பாளர் தற்கொலை… அதிர்ச்சி காரணம்!

Makkal Needhi Maiam

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவர் பெருஞ்சோகத்தை உருவாக்கியுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வியை தழுவி இருந்தாலும், பெருவாரியான வாக்குச்சதவீதத்தை பதிவு செய்திருந்தது. இதனையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து களம் கண்டது. ஆனால் யாருமே எதிர்பாராத அளவிற்கு மக்கள் நீதி மய்யம் படு தோல்வியை சந்தித்தது. பல வார்டுகளில் மநீம வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

பல வார்டுகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் 100-க்கும் குறைவான வாக்குகளை பெற்றனர். யாரும் ஆயிரம் வாக்குகளை தாண்டவில்லை. குறிப்பாக சிவகங்கை நகராட்சியில் முதலாவது வார்டில் போட்டியிட்ட மநீம வேட்பாளர் ஒரு வாக்கு கூட வாங்காமல் படுதோல்வி அடைந்தது சோசியல் மீடியாவி வைரலானது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி 36 வது வார்டில் போட்டியிட்ட மணி என்பவர் தேர்தல் செலவுக்காக ரூ 50 ஆயிரம் கடன் வாங்கி இருந்துள்ளார். தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருக்கு வெறும் 44 ஓட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் வாக்கு எண்ணிக்கை முடிந்த நாளில் இருந்தே மணி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் மணி இன்று தற்கொலை செய்து கொண்டது கட்சியினர், குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…