உக்ரைன் போர்: ருமேனியாவிற்குள் நுழைந்த இந்திய அரசு… 270 பேர் மீட்பு!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், முதற்கட்டமாக 270 இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு உலக நாடுகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறது. தற்போது 3வது நாளாக முன்னேறி வரும் ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்குள் நுழைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த போர் பதற்றத்துக்கு நடுவே சுமார் 16 ஆயிரம் இந்தியர்கள், குறிப்பாக மாணவர்கள் உக்ரைனில் சிக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ள நிலையில், அவர்களை உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் தாயகம் அழைத்து வர முயன்று வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

தங்களது பிள்ளைகளை பாதுகாப்பாக தாயகம் மீட்டு வர வேண்டும் என பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனிடையே ஏர் இந்தியாவை தனியாருக்கு தாரை வார்த்தை அடுத்து, மத்திய அரசு உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க தனியார் விமான நிறுவனங்களிடம் பேரம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் எந்த தனியார் விமான நிறுவனம் தாங்கள் நிர்ணயித்துள்ள தொகையை குறைத்துக்கொள்ள முன்வராததால், மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

மேற்கு உக்ரைனில் அமைந்துள்ள செர்னிவ்சி நகரில் இருந்து வெளியேறிய இந்திய மாணவர்களின் முதல் குழு உக்ரைன் எல்லையைக் கடந்து வெற்றிகரமாக ருமேனியா எல்லைக்கு வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டின் லிவிவ் மற்றும் செர்னிவ்சி நகரங்களில் வெளியுறவுத் துறையின் முகாம் அலுவலகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அங்குக் கூடுதல் அதிகாரிகளை வெளியுறவுத் துறை அமைச்சகம் நியமித்து வருகிறது. இந்தச் சூழலில் தான் ருமேனியா எல்லைக்கு இந்தியா மாணவர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். அதேபோல போலந்து எல்லையில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள லிவிவ் நகரில் மருத்துவம் படித்து வரும் மாணவர்கள் போலாந்து நாட்டின் எல்லைக்கு செல்கின்றனர்.

தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி, உக்ரைனிலிருந்து முதல் கட்டமாக 270 இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். உக்ரைன் – ருமேனியா எல்லை வழியே பேருந்தில் அழைத்து வரப்பட்டுள்ள அவர், ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்ப உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோவையும் வெளியிட்டு மத்திய அரசு மாணவர்களை மீட்டு வருவதை உறுதிபடுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…