தாய் மண்ணை விட்டுக்கொடுக்க மாட்டேன்… உக்ரைன் வீரர் செய்த உயிர் தியாகம்!

Ukraine

உலக நாடுகளின் எதிர்ப்பைப் புறந்தள்ளி உக்ரைன் மீது ரஷ்யா 4-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் இதுவரை ரஷ்ய தரப்பில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30-க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ரஷ்ய தரப்பில் 800க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், உக்ரைனின் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு ஆதரவாக உலக நாடுகள் படையை அனுப்பாத நிலையில், தனது நாட்டு மக்களையே வீரர்களாக மாற்றியுள்ளது. முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள் என தன்னார்வர்லர்கள் பலரும் தனது தாய்நாட்டை காக்க உக்ரைன் ராணுவத்தில் இணைந்து வருகின்றனர்.

இதனிடையே ரஷ்ய வீரர்களின் முன்னெடுப்பை தடுக்க, உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் போர்க்களத்தில் மனித வெடிகுண்டாக மாறி உயிரிழந்தார். தெற்கு மாகாணமான கெர்சானில் ரஷ்ய ராணுவ வாகனங்கள் படையெடுத்து சென்றனர். அவர்களை தடுக்க எண்ணிய உக்ரைன் ராணுவ வீரர் வோலா டைமிரோவிச் (Vitaly Skakun Volodymyrovych), தன்னிடம் இருந்த குண்டுகளை வெடிக்க செய்து உயிர் நீத்தார்.

இதனால் ரஷ்ய வீரர்கள் முன்னோக்கி செல்ல திட்டமிட்டு இருந்த பாலம் முற்றிலும் சேதம் அடைந்தது. உக்ரைன் ராணுவ வீரரின் இந்த உயிர் தியாகம், என்றும் நினைவில் நிற்கும் என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….