பழுதடைந்த12,355 சிசிடிவி கேமராக்களை சீரமைக்க ரூ.1.17 கோடி ஒதுக்கீடு… காவல் ஆணையர் உத்தரவு!

sankar

காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் 12,355 பழுதடைந்த சிசிடிவி கேமராக்களை சரி செய்ய ரூ.1 கோடியே 17 லட்சத்து 37,250 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் குற்றச்செயல்களை தடுக்க சென்னை பெருநகர் முழுவதும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டன. இவைகளில் பெரும்பாலானவை தற்போது இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவதிலும் சுணக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் கணக்கிடப்பட்டதில் 12,355 கேமராக்கள் பழுதானது தெரியவந்தது. இதுகுறித்து ஆணையர் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘பழுதடைந்துள்ள சிசிடிவி கேமராக்களை சரி செய்வதற்கு 2021-2022ம் நிதி ஆண்டில் ரூ.1 கோடியே 17 லட்சத்து 37,250 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழுது நீக்கும் பணியினை விரைந்து முடிக்கும்படியும் பணிகள் முடிந்தவுடன் அனைத்து கேமராக்களும் நல்ல முறையில் செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்யுமாறும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என காவல் ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….