லீவு முடிஞ்சு – எல்லாரும் ஆபிஸ் கிளம்புங்க …. ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கும் ஐ.டி நிறுவனங்கள்

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்த கொடிய வைரஸால் பல லட்சம் மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த கொரோனா தடுக்க போடப்பட்ட பொதுமுடக்கத்தால் மனிதர்களின் அன்றாட வாழ்வியல் முற்றிலும் மாறியது. உதாரணமாக காலையில் அவசர அவசரமாக வேலைக்கு சென்று கொண்டிருந்த மனிதர்கள், வீட்டிலிருந்தே வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வி கற்கும் முறையும் கற்பிக்கப்பட்டது. இதனால் குழந்தைகளும், பெரியவர்களும் மனதாலும்,உடலாலும் பெரிதாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தப்பட்டதால் கொரோனாவின் கோர தாண்டவம் குறைய தொடங்கியது. அதனை தொடர்ந்து பொதுமுடக்கமும் படிப்படியாக தளர்வு செய்யப்பட்டது. இதனால் மக்கள் மீண்டும் அவர்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருந்த ஐ.டி ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யுமாறு நிறுவனர் கூறி வருகிறது. அதன்படி மார்ச் 15-ம் தேதியிலிருந்து ஊழியர்கள் அனைவரும் மீண்டும் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டுமென்று  மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

இதற்கு முன்னர் கூகுள் நிறுவனமும் தனது ஊழியர்களை ஏப்ரல் 4-ம் தேதி அலுவலகத்திற்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டது.

Leave a Reply

Your email address will not be published.