இன்று இலவச பயணம்… மெட்ரோ நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெண்களின் கலாச்சார, அரசியல் மற்றும் சமூக பொருளாதார சாதனைகளை நினைவுகூறும் வகையில் மார்ச் 8-ம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் உலகளவில் கொண்டாடப்படுகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம். ஜியோ இந்தியா அறக்கட்டளையுடன் இணைந்து, மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. “வொண்டர் வுமன் ஃபெஸ்ட்” என்ற கருப்பொருளை மையமாக கொண்டு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மார்ச் 8. 2022 (நாளை) காலை 11 மணி முதல் மகளிர் தினக் கொண்டாட்டத்தைத் தொடங்குகிறது. நடைப்போட்டி

மகளிர் தினக் கொண்டாட்டத்தின் போது, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் 900 மீட்டர் தூரம் நடைப்போட்டி நடத்தப்படுகிறது., இதில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பணியாளர்கள், திருவான்மியூர் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், ஜியோ இந்தியா அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் பள்ளிக்கரணையில் உள்ள ஜெருசலேம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

ஊரக வளர்ச்சி மையத்திற்கான சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரம் அறிமுகம் வொண்டர் வுமன் கேர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஜியோ இந்தியா அறக்கட்டளையுடன் இணைந்து செங்கல்பட்டு மாவட்டம், பழங்குடி சமூக மக்கள் கிராமப்புற மேம்பாட்டு மையத்திற்காக சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்துகிறது. தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் திருமதி. ஏ.எஸ் குமாரி மற்றும் தமிழ் திரைப்படத்துறை நடிகர் திரு.சந்தோஷ் பிரதாப் ஆகியோர் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இந்த இயந்திரத்தை தொடங்கி வைக்கிறார்கள். மருத்துவ முகாம்

மேலும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ, கோயம்பேடு மெட்ரோ, அண்ணாநகர் கிழக்கு மெட்ரோ, வடபழனி மெட்ரோ, விம்கோ நகர் மெட்ரோ, தேனாம்பேட்டை மெட்ரோ மற்றும் கிண்டி மெட்ரோ ஆகிய ஆறு மெட்ரோ இரயில் நிலையங்களில்பொதுமக்கள், மெட்ரோ பயணிகள் மற்றும் மெட்ரோ ஊழியர்களின் நலனுக்காக மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் மருத்துவ முகாமில், பொது மருத்துவம், பல் மருத்துவம், மகளிர் நோய் மருத்துவம் ஆகியவை நடத்தப்படும். மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வின் ஒரு பகுதியாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பெண் ஊழியர்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் விநியோகம் செய்யப்படும்.

இதனைத் தொடர்ந்து, வண்டலூரில் உள்ள ஊரக வளர்ச்சி மையத்தைச் சேர்ந்த குழந்தைகள் கோயம்பேடு மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கும், மீண்டும் கோயம்பேடு மெட்ரோ நிலையத்திற்கும் மெட்ரோ இரயிலில் இலவசமாக பயணிக்கயிருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…