‘மார்ச் 20’ அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மார்ச் 20-ம்தேதி பள்ளி மேலாண்மைக் குழுகூட்டம் நடைபெற இருப்பதாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அரசுப் பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படியும் பள்ளிமேலாண்மைக் குழு ஏற்படுத்தப்பட்டது. அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் (எஸ்எஸ்ஏ) கீழ் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் வளர்ச்சியில் இக்குழு முக்கியப் பங்கு வகிக்கிறது.

பள்ளிக் கல்வித்துறை அரசாணையின்படி, பள்ளி மேலாண்மைக் குழுவை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்வது அவசியம். அதன்படி அனைத்து பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுவை மறுகட்டமைப்பு செய்வதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம், பள்ளி மேலாண்மைக் குழு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மார்ச் 20-ம் தேதிகாலை 10 மணி முதல் பகல்1 மணி வரை பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் அனைத்து பெற்றோர் கூட்டத்தை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும்.

இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் அமைப்பு, அதன் செயல்பாடுகள், பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவம், பெற்றோர்களின் பங்கு மற்றும் அடுத்து நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்வில் கலந்து கொள்வதின் முக்கியத்துவம் ஆகியவற்றை பெற்றோருக்கு எளிய முறையில் தலைமை ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.