காமெடியனாக இருந்து முதல்வராக மாறிய பகவந்த் மான்..!

உத்தரபிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அந்தக் கட்சி 91 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. அதில் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மியின் சார்பில் போட்டியிட்ட பகவந்த் மான் அவர் போட்டியிட்ட தூரி தொகுதியில் அமோக வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் பஞ்சாப் மாநிலத்தின் அடுத்த முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

கடந்த ஜனவரி 18-ம் தேதி பகவந்த் சிங் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்னதாக பஞ்சாப் மாநில மக்களிடம் தொலைபேசி வாயிலாக கருத்துகள் வரவேற்கப்பட்டன. அதில் அம்மாநில மக்கள் பலர் பகவந்த் மானின் பெயரையே முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்தனர். அதன் காரணமாக அவர் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

சட்டோஜ் எனும் கிராமத்தில் மான்சிங் பிறந்தார். ஒரு காமெடியனாக தனது வாழ்க்கையை அவர் தொடங்கினார். கடந்த 2011-ஆம் ஆண்டு பஞ்சாப் மக்கள் கட்சியில் இருந்து இதன் மூலம் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அடுத்த ஆண்டே தேர்தலில் களம் இறங்கிய அவர் தோல்வியை சந்தித்தார். கடந்த 2014-ஆம் ஆண்டு ஆம் ஆத்மியில் தன்னை இணைத்துக் கொண்டார் அவர். அதே ஆண்டில் தேர்தலில் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனுபமிக்க வேட்பாளரான சுக்தேவ் சிங்கை தோற்கடித்தார். இதன்மூலம் அரசியலில் அவர் முக்கிய இடம் பிடித்தார்.

தனது நகைச்சுவை திறமையால் தொலைக்காட்சிகளில் வெளியாகும் நகைச்சுவை தொடர்களில் நடித்து மக்களிடம் வரவேற்பைப் பெற்றார். அவருக்கான செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. இந்நிலையில், அவர் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published.