தேர்தல் தோல்வி குறித்து ராகுல் காந்தி என்ன சொன்னார் தெரியுமா..?

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா என ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இந்த ஐந்து மாநிலங்களில் ஒன்றில் கூட காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான ராகுல் காந்தி ட்விட்டர் மூலம் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது,

மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை மனதார ஏற்கிறேன். வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த தொண்டர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கும் எனது நன்றிகள். இந்த தேர்தல் முடிவுகளிலிருந்து பாடம் கற்று, இந்திய மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததன் மூலம் இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை இரண்டாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.