1 லிட்டர் பெட்ரோல் ரூ.254, டீசல் 176 … பிரபல நாட்டில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு

உக்ரைன் ரஷ்யா போரினால் உலகின் பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசலின் விலை கடுமையாக உயர்ந்தது.அந்த வகையில் இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 254 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீலிங் விலை 176 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

அதிகமான சுற்றுலா தளத்தை  கொண்ட நாடு இலங்கை. அங்குள்ள சுற்றுலா இடங்களை பார்ப்பதற்கு உலகின் பல்வேறு நாட்டு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு சீனாவிலிருந்து பறவையை கொரோனா வைரஸால், இலங்கையில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அந்நிய செலவாணியை முற்றிலும் இழந்ததால் இலங்கையின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை எல்லாம் கடுமையாக அதிகரிக்கப்பட்டது.இந்நிலையில் தற்போது இந்த எரிபொருளின் விலையேற்றம் மக்களின் அன்றாட வாழ்வில் பெரிதும் பாதிக்கப்படும். இதனை கட்டுப்படுத்த இலங்கை அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களும், அரசியல் விமர்சகர்களும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.