நான் இருக்கேன்… வைரல் சிறுமிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி!

MK Stalin

கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் ஆங்கிலம் பேசி அசத்திய நரிக்குறவர் சமுதாய மாணவிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்துரையாடினார்.

சோசியல் மீடியா மூலமாக கடந்த சில நாட்களாகவே பள்ளி மாணவ, மாணவிகளின் அற்புதமான பேச்சுக்கள் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் சிறுவன் அப்துல்கலாமின் மனிதநேயம் குறித்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து அந்த மாணவன் மற்றும் அவரது குடும்பத்தினரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தார். அப்போது அந்த குடும்பத்தினர் தங்களக்கு வசிக்க ஒரு வீடு தேவை என கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவை அடுத்து, அடுத்த இரண்டு நாட்களிலேயே சிறுவனுக்கு கே.கே.நகர் பகுதியில் வீடும் ஒதுக்கப்பட்டது.

தற்போது சமூகத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் வசித்து வரும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் சக மாணவிகள் தங்களிடம் எவ்வாறு பழகுகிறார்கள் என்பது பற்றி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கலந்துரையாடிய வீடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. மாணவிகளின் ஆங்கில புலமையை பலரும் பாராட்டி வந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.

நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஆவடி இமாகுலேட் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் ஆர்.பிரியா, அம்பத்தூர் எபினேசர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் கே.திவ்யா, ஆவடி நசரத் அகாடமியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் எஸ்.எஸ். தர்ஷினி ஆகியோரது வீடியோ பதிவினை பார்த்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டுள்ளார். இதனையடுத்து அந்த 3 மாணவிகளையும் இன்று மாணவிகளையும் இன்று தலைமைச் செயலகத்தில் அழைத்துப் கலந்துரையாடினார்.

அப்போது, அம்மாணவிகள் மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உள்ள நரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் வகுப்பில் சேர்த்திட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும், தாங்கள் வசிக்கும் ஆவடி நரிக்குறவர் காலனியை மேம்படுத்திடவும், தங்கள் கல்விக்கு தேவையான உதவிகளை செய்திடவும் கேட்டுக் கொண்டார்கள். மேலும், பள்ளி மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வரும் முதலமைச்சருக்கு அம்மாணவிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

அப்போது முதலமைச்சர் அம்மாணவிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *