என்னது இவ்வளவு விலையா?… இல்லத்தரசிகளுக்கு பேரதிர்ச்சி!

இந்தியாவில் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களான நெஸ்லே இந்தியா மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனங்கள் தங்களது முக்கிய உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளன.

இந்தியர்களால் அதிக அளவில் விரும்பி உண்ணப்படும் உணவான மேகி நூடுல்ஸ் விலையை நெஸ்லே நிறுவனம் உயர்த்தியுள்ளது. மேகி நூடுல்ஸின் விலையை 9 முதல் 16 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. விலை உயர்வுக்கு பிறகு தற்போது 70 கிராம் மேகி மசாலா நூடுல்ஸின் விலை ரூ.12ல் இருந்து ரூ.14 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் 140 கிராம் மேகி மசாலா நூடுல்ஸின் விலை ரூ.3 அல்லது 12.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தவிர, மேகியின் 560 கிராம் பேக்கின் விலை 9.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, இப்போது ரூ.96க்கு விற்கப்படும் மேகி நூடுல்ஸ் இனி, 105 ரூபாய்க்கு விற்பனையாகும். இதனுடன், பால் மற்றும் காபி பவுடர் விலையும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெஸ்லே தனது தரமான முதல் தர பால்பவுடர் விலையை 4 சதவீதம் உயர்த்தியுள்ளது, அதாவது ரூ.75லிருந்து ரூ.78ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நெஸ்கபே கிளாசிக் காபி பவுடரின் விலையும் மூன்று முதல் ஏழு சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நெஸ்கபே கிளாசிக் 25 கிராம் பேக்கின் விலை 2.5 சதவீதம் அதிகரித்து ரூ.78ல் இருந்து ரூ.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 50 கிராம் பேக்கின் விலை 3.4 சதவீதம் உயர்த்தப்பட்டு, ரூ.145ல் இருந்து ரூ.150 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது

இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடேட் நிறுவனம் தன்னிடம் உள்ள ப்ரூ காபி பவுடரின் விலையை 3 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. கோல்டு காபி விலை 3% முதல் 4 சதவீதம் வரை அதிகரி்க்கப்பட்டுள்ளது. ப்ரூ இன்ஸ்டன்ட் விலை 3 முதல் 6.6% வரை உயர்ந்துள்ளது. அதே போல் தாஜ்மஹால் டீ பவுடரின் விலையும் 3.7 சதவீதத்தில் இருந்து 5.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகரித்து வருவதால், தனது தயாரிப்புகளை விலை உயர்த்துவதாக இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *