தொழில்துறைக்கு மட்டும் இத்தனை அறிவிப்புகளா?… பட்டையைக் கிளம்பும் தமிழக பட்ஜெட்!

PTR_Bud

நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் நிதி நிலை அறிக்கையில், தொழில்துறை சார்ந்த அறிவிப்புகள் என்னென்ன என பார்க்கலாம்…

  • சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ.911 கோடி நிதி ஒதுக்கீடு
  • 2030-ம் ஆண்டில் 100 பில்லியன் டாலர் என்ற இலக்கை அடையும் வகையில், புதிய கட்டமைப்புகளை உருவாக்க 100 கோடி ரூபாய் சிறப்பு நிதி.
  • புதிய காலணி மற்றும் தோல் தொழில் கொள்கை உருவாக்கப்படும்.
  • தமிழகம் முழுக்க தொழில் வளர்ச்சியை பரவலாக்கும் வகையில், மதுரை, திருவள்ளூர், கோவை, பெரம்பலூர், வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் புதிய தொழில்பூங்காங்கள் அமைக்கப்படும். இதன்மூலம் 50,000 கோடி ரூபாய் அளவிலான முதலீடு ஈர்க்கப்படும்.
  • உள்நாட்டு , வெளிநாட்டு ஏற்றுமதியில் மதிப்பீட்டு பொருட்களை பிரபலப்படுத்த கோவையில் கைத்தொழில் மேம்பாட்டு குழுமம் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
  • செய்யாறு & கும்மிடிப்பூண்டியில் சரக்கு வாகன மையம் அமைக்கப்படும்.
  • புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களைக் கொண்டுசேர்க்கவும் அவர்களுக்கான சட்ட உரிமைகளைத் தெரிந்துகொள்ளவும், நடமாடும் தகவல் மற்றும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்படும்.
  • போக்குவரத்துக்கு துறைக்கு ரூ.5375.51 கோடி ஒதுக்கீடு.
  • எரிசக்தி துறைக்கு 19,297.52 கோடி ரூபாய் ஒதுக்கீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *