ஆகஸ்டில் தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட்..!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் வருகிற ஆகஸ்டு 27 முதல் தொடங்கி செப்டம்பர் 11 வரை நடைபெற உள்ளது. அதற்கான தகுதி சுற்று போட்டிகள் வருகிற ஆகஸ்ட் 20 முதல் தொடங்க உள்ளன.

2022ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்க உள்ளன. அவை இந்தியா,இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி ஆகியன. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் கடைசியாக மோதி இருந்தது. அதன் பின்னர் தற்போது இந்த ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் மீண்டும் மோத உள்ளது.

தகுதிச்சுற்றுக்கான போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம்,குவைத்,கத்தார் மற்றும் சிங்கப்பூர் ஆகிய அணிகள் மோத உள்ளன. இந்திய அணி கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் போட்டியில் கோப்பையை கைப்பற்றி இருந்தது. கொரோனா பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தப் படவில்லை.

இந்தியா ஆசிய கோப்பையில் சிறந்த சாதனைகளைப் படைத்துள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள 14 ஆசிய கோப்பைகளில் ஏழு முறை இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. மேலும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளை தொடர்ந்து இந்திய அணி அதிக ஆசிய போட்டிகளில் விளையாடி அணியாக இருந்து வருகிறது.

இந்த முறை நடைபெற உள்ள ஆசிய கோப்பை 15-வது ஆசிய கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…