‘இனி நுழைவுத் தேர்வு கிடையாது’ … மாணவர்களுக்கு நல்ல செய்தி சொன்ன அமைச்சர்!

தமிழகத்தில் இனி எந்த ரூபத்திலும் நுழைவுத் தேர்வு நுழைய முயற்சித்தாலும், அதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக எதிர்பார் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தின் போது, பாமக சட்டமன்ற குழுத்தலைவர் ஜி.கே.மணி, மத்தியப் பல்கலைக்ககழக மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனுமதிக்கக்கூடாது என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி: எந்தக் காலத்திலும் தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு வைக்கப்படமாட்டாது. நுழைவுத் தேர்வு தமிழகத்தில் எந்த ரூபத்தில் நுழைய முயற்சித்தாலும் அதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக எதிர்ப்பார் எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்.