இனிமேல் ஏலியன் கூட பேசலாம் போலயே… நிலவிலும் வைஃபை … அசத்தும் தொழில்நுட்பம்

1969 ஆம் ஆண்டு மனிதன் நிலவில் தனது முதல் காலடியை பதித்தான். முதல் மனிதன் நிலவில் கால் வைத்ததிலிருந்து 50 வருடங்கள் கடந்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் நிலவில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் வளர்ந்து வரும் இணைய சேவை மற்றும் தொழில்நுட்பமானது பூமியை கடந்து தற்போது நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
இந்த முயற்சி வெற்றி அடையும் நிலையில், நிலவில் இணைய சேவையை அமைக்க அக்வாரியன் ஸ்பேஸ் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. சோல்நெட் என அழைக்கப்படும் இந்த திட்டமானது 2024 ஆண்டில் தனது சேவையை தொடங்க திட்டமிட்டு உள்ளது.
இந்த திட்டம் வெற்றியடைந்தால் பூமியில் இருந்து நிலவிற்கு இணைய சேவை மூலம் மக்கள் தொடர்பு கொள்ள முடியும் என அக்வாரியன் ஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலவில் இந்த இணைய சேவை வெற்றியடையும் நிலையில் அதை தொடர்ந்து செவ்வாய் கிரகத்திலும் இணைய சேவை தொடங்கப்படும் என அக்வாரியன் ஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.