ரஷ்ய அதிபர் புதினின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா…!!

ரஷ்யா- உக்ரைன் போர் நடக்கும் இந்த வேளையில், ரஷ்யா அதிபர் புதினின் சொத்து மதிப்பு வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இவரின் சொத்து மதிப்பானது சுமார் 15 லட்சம் கோடி இருக்கும் என அமெரிக்காவை சேர்த்த பில் பிரவுடர் தெரிவித்துள்ளது.
அமேசான் நிறுவன அதிபர் ஜெப் பெசோஸ் மற்றும் பில்கேட்ஸ் காட்டிலும் ரஷ்ய அதிபர் புதினின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகம் என பில் பிரவுடர் குறிப்பிட்டுள்ளார். இவரே உலகின் 6வது பணக்கார மனிதர் என தெரியவந்துள்ளது.
புதின் அணியும் கை கடிகாரத்தின் விலை 5 கோடி, 700 கார்கள், 6 மாடி கொண்ட சொகுசு படகு மற்றும் 1,90,000 சதுர அடி கொண்ட சொகுசு பங்களா, 58 ஹெலிகாப்டர்கள், தனி விமானங்கள், ஜெட் விமானங்களையும் அவர் வைத்துள்ளார் . இவற்றின் சொத்து மதிப்பு சுமார் 200 பில்லியன் டாலர் ஆகும்.ரஷ்யா- உக்ரைன் போர் நடக்கும் இந்த வேலையில் புதினின் சொகுசு வாழ்க்கை பலரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது.