மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… 2 ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி!

மதுரை சித்திரை திருவிழாவுக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படாததால் அம்மாவட்ட மக்கள் விழாவை கொண்டாட உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.

மதுரையின் அடையாளமாக கருதப்படும் சித்திரை திருவிழா கொரோனா
நோய் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் பக்தர்களின்றி நடைபெற்றது.
கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில் சித்திரை திருவிழாவுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.

எனவே இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற உள்ள சித்திரை திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் சித்திரைத் திருவிழாவில் ஏப்ரல் 14ஆம் தேதி மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

ஏப்ரல் 15 ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் சிவகாசியில் உள்ள அச்சகத்தில் சித்திரை திருவிழாவுக்கான அழைப்பிதழ்கள் அச்சடிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…