துபாய் கண்காட்சியில் தமிழக அரங்கை பார்த்த ஸ்டாலின் என்ன சொன்னார் தெரியுமா?

முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக கடந்த 24ம் தேதி மாலை துபாய் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு அரசு மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து புதிய முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு துபாயில், எக்ஸ்போ கண்காட்சி கடந்த வருடம் அக்டோபர் 1ம் தேதி தொடங்கி வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை, தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்பட உள்ளது. எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த அரங்கில் தமிழ்நாடு கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை விளக்கும் சிலைகள், வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் சாதனைகளை வெளிப்படுத்தும் விதமாக கண்காட்சி அமைந்துள்ளதாகவும், அதுதொடர்பான புரிதலை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும் எனவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கண்காட்சியில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…