1,600 கோடி முதலீட்டை அள்ளிய ஸ்டாலின்… துபாய் புரிந்துணர்வு ஒப்பந்தம் முழு விவரம் என்ன?

இன்று துபாயில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளர்களை சந்தித்தார். இந்நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு முதலீட்டாளர்களுடன் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழகத்தில் ரூ 1600 கோடி அன்னிய முதலீடுகளை ஈர்க்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதில் நோபல் குழுமம் சார்பில் ரூ 1000 கோடி முதலீட்டில் எஃகு தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் 2 லூலூ ஷாப்பிங் மற்றும் உணவு பதப்படுத்துதலுக்காக ஒரு ஏற்றுமதி சார்ந்த யூனிட் திறக்க உள்ளதாகவும், இதனால் 5000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வராக பொறுப்பேற்று முதல் முறையாக வெளிநாட்டு பயணமாக துபாய்க்கு வந்துள்ளேன். தமிழகம்- துபாய் இடையே பொருளாதார உறவை மேம்படுத்தவே வந்துள்ளேன்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நீங்கள் எங்கள் மாநிலத்தில் முதலீடுகளையும் தொழிலையும் செய்வதற்கான சாத்திய கூறுகள் ஏராளம் உள்ளது. வாருங்கள் அதற்கான பயணத்தில் இணைந்து நாம் எல்லாரும் பயனடைவோம் என அன்புடன் அழைப்பு விடுக்கிறேன். தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ரியல் எஸ்டேட் வணிகத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் வாய்ப்புகள் கொட்டிகிடக்கிறது. புதுப்பிக்க தக்க மாற்று சக்தி, வான்வெளி மற்றும் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் சிறந்த உட்கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளோம். மின் வாகனங்கள், மின்னேற்றி நிலையங்களில் முதலீடுகளை வரவேற்கிறோம். புது தொழில் மற்றும் புத்தாக்க தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறோம் எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உயர் அதிகாரிகள் மற்றும் துபாய் முதலீட்டாளர்கள், லூலூ நிறுவனங்களின் தலைவர் யூசுஃப் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published.