இனி அந்த குரல் கேக்காது …. ஒன்றிய அரசு எடுத்த கூலான முடிவு

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியது . இத்தொற்று பரவலை தடுக்க ஒன்றிய அரசும் மற்றும் மாநில அரசுகளும்  பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டது. அந்த வகையில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை சுத்தமாகக் கழுவுதல் என பல்வேறு விழிப்புணர்வுகள் அரசின் சார்பாக  மக்களுக்கு வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இந்த விழிப்புணர்வு அனைவரையும் சென்றடைய காலர் டியூன் முறையில் மீண்டும், மீண்டும் ஒலிக்க செய்யப்பட்டது. கால் செய்யும்போது  அனைவரும் இந்த விழிப்புணர்வு காலர் டியூனை  கேட்ட பின்பே  மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலை உருவானது. ஒரு கட்டத்தில் இது மக்களிடையே எரிச்சலை உண்டாக்கின.

தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. இதற்கு காரணம் மக்களில்  பெரும்பாலானோர் தடுப்பூசியை  செலுத்திக் கொண்டு தங்களை பாதுகாத்துக் கொண்டதே என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது .  

இந்நிலையில் கொரோனா நான்காவது அலை வந்தாலும் பூஸ்டர் டோஸ் செலுத்துவதன் மூலம் கொரோனா தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வர முடியும் என மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கொரோனா காலர் டியூன் அறிவிப்பை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என  மொபைல் போன் சந்தாதாரர்கள்,  ஒன்றிய தொலைத்தொடர்பு துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்தியாவில்  ஊரடங்கு இந்த மாத இறுதியில் முழுமையாக முடிவுக்கு  வரும் நிலையில், விரைவில் இந்த கொரோனா விழிப்புணர்வு காலர் டியூன் ரத்தாகி விடும் என ஒன்றிய  சுகாதாரத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.