தீவிரமடையும் விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு!

விருதுநகரில் 22 வயது இளம்பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஹரிஹரன், ஜூனத் அஹமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதனையடுத்து அவர்கள் 4 பேரும் விசாரணைக்காக, மதுரை சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். அவர்கள் 4 பேரையும், வரும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். இதனையடுத்து 4 பேரும் விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…