‘ஹலோ டாக்டர்’ … இனி ஹாஸ்பிட்டலுக்கு போக வேண்டாம்!

மூன்றில் இரண்டு மடங்கு பேர், இன்னுயிர் காப்போம் திட்டத்தால் உயிர்
பிழைத்துள்ளனர் என மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகரில் இல்லங்களில் நோயாளிகளுக்கான உடல் நல பராமரிப்பு சேவைகளோடு இல்லங்களிலேயே மருத்துவ சிகிச்சையும் வழங்குகின்ற ஹாலோ டாக்டர் – 2001 2001 திட்டத்தை மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். விழாவில் சிம்ஸ் மருத்துவமனை சார்பில் பத்மபிரியா பச்சமுத்து, மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஹலோ டாக்டர் 2001 2001 செயல் திட்டமானது முறையான கண்காணிப்பு சிகிச்சை முறையோடு மெய்நிகர் முறையில்
மருத்துவர்கள் அது ஆலோசனைகளையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் ஹலோ டாக்டர் திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்: கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மருத்துவ தேவை ஆலோசனை வீட்டிலிருந்து தேவைப்
படுவதால் ஹலோ டாக்டர் திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஹாலோ டாக்டர் திட்டத்தை தொடங்கிய பிறகு மேடையில் பேசிய அமைச்சர்சென்னையின் மருத்துவ சேவையின் புதுமையான முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவ கட்டமைப்பில் தமிழகம் முன்னணியில் உள்ளது. தமிழகம் மருத்துவ கட்டமைப்பில் மிக சிறந்த இடத்தில் உள்ளது.

மக்களை தேடி மருத்துவம் பார்ப்பது, 2007ல் சென்னை மாநகராட்சி சார்பில்
தொடங்கப்பட்டது. மக்களை தேடி மாநகராட்சி திட்டம் அப்போது இந்தியா முழுவதும் சிறப்பான திட்டமாக திகழ்ந்தது. இந்தியாவில் உள்ள சிறந்த மாநகராட்சிகளில் பட்டியலில் சுகாதார கட்டமைப்பில் சென்னை திகழ்ந்தது.

வெளி நாடுகளில் இருந்து சென்னைக்கு வந்து தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்ப்பது அதிகரித்து வருகிறது. சேனிடரி நாப்கின் வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்த பட்டு வருகிறது. சென்னையில் சிம்ஸ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம்
இந்தியாவிற்கே முன் மாதிரியாக உள்ளது. இது முதல்வரால் தொடங்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை போன்றதாகும்.

தமிழகத்தில் ஒரு கோடி பேருக்கு நீரிழிவு நோய் போன்றவை உள்ளதாக என்பது
குறித்து திரையிடல் சோதனை நடத்தப்படும். 54 லட்சம் பேர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்.

640 மருத்துவமனைகளில் இன்னுயிர் காப்போம் திட்டம் செயல்பட்டு வருகிறது. 38,117 பேர் இன்னுயிர் காப்போம் திட்டத்தால் பயன் பெற்றுள்ளனர். இன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு இதுவரை 33 கோடி ரூபாய் செலவலிக்கப்பட்டுள்ளது . மூன்றில் இரண்டு மடங்கு பேர், இன்னுயிர் காப்போம் திட்டத்தால் உயிர் பிழைத்துள்ளனர். நெஞ்சை நிமித்தி சொல்லலாம். வீடு தேடி மருத்துவம் பார்ப்பதும், மருந்துகள் தருவதும் சிறப்பாக செயல்பட்டு வருவது தமிழகத்தில் மட்டும் தான் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.