‘வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து’.. வரவேற்ற கருணாஸ்!

அதிமுக அரசினால் அரசியல் உள்நோக்கத்திற்காக போடப்பட்ட இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது மிக மிக வரவேற்கதக்கது என கருணாஸ் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பில் தலைவர் கருணாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றிதான் இந்த தீர்ப்பு எனத் தெரிவித்தார்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட 116 சமூகங்கள் இருக்கக்கூடிய தமிழ்நாட்டில் ஒரு சமூகத்திறகு மட்டும் சலுகை என்பதை மற்ற பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் ஏற்றுக் கொள்ளாது கருணாஸ்.
ஜனநாயக நாட்டின் மக்கள்தொகையில் அடிப்படையில் இடஒதுக்கிடு வழங்க வேண்டும் என்றும், மத்திய அரசு நிதி ஒதுக்கியும், அரசானை வெளியிட்டும் இதுவரை சீர்மரப்பினர் கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்தவில்லை என்றும் குற்றச்சாட்டினார்.
தமிழ்நாட்டில் உள்ள மக்களை சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி அதன் பின்னர் தான் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.