கஞ்சா கடத்துவோருக்கு டிஜிபி சைலேந்திர பாபு விடுத்த எச்சரிக்கை!

மாநில எல்லைகளில் கூடுதலாக சோதனைச் சாவடிகள் அமைத்து கஞ்சா கடத்தல் முற்றிலும் தடுக்கப்படும் என சேலத்தில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

சேலம் லைன் மேடு பகுதியில் உள்ள சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இன்று மாலை ஆய்வு மேற்கொண்டார்.

இதில் சேலம், நாமக்கல் தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சேலம், நாமக்கல் , தர்மபுரி , கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கஞ்சா கடத்தல் வழக்குகளில் துப்பு துலங்கிய தனிப்படை போலீசார், கொலை, கொள்ளை வழக்குகளில் உடனுக்குடன் துப்புதுலங்கிய போலீசாருக்கும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார் .

இதன் பின்னர் அவர் கூறுகையில் கஞ்சா கடத்தல் முற்றிலும் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக மாநில எல்லைகளில் கூடுதலாக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. கஞ்சா கடத்தல் முற்றிலும் தடுக்க காவல் துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோல சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி பல்வேறு வழக்குகளில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சைபர் குற்றங்களில் அதிகம் வடநாட்டினர் ஈடுபட்டு உள்ளனர். இவர்களை கைது செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…