வாரத்தில் ஒரு நாள் முழுவதும் மின்வெட்டு…. அதிர்ச்சியில் மக்கள்

எரி பொருட்களின் விலையேற்றத்தால் குஜராத்தில் 500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க குஜராத்தில் இருக்கும் தொழிற்சாலைகளில் வாரம் ஒரு முறை முழு நாள் மின்வெட்டு செய்ய படும் என்று குஜராத் ஊர்ஜா விகாஸ் நிகாம் (GUVNL) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து GUVNL-ல் பணிபுரியும் மூத்த அதிகாரி ஒருவர்  தெரிவித்தது, “குஜராத்தில் சராசரி உச்ச மின் தேவை 18,000 மெகாவாட் முதல் 19,000 மெகாவாட் ஆகும்.இதில் 60 சதவீத மின்சாரம் தொழிற்சாலைகளுக்கே பயன்படுத்தப்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறை மின்வெட்டு செய்ய வேண்டும் என்று முறை ஏற்கனவே அமலில் உள்ளது. ஆனால் அது கட்டாயமாக்கப்படவில்லை. ஆனால் தற்போது  மின் தேவை அதிகரித்துள்ளதால் தற்போது மின்வெட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து குஜராத்தில்  அடுத்த 15 நாட்களில் அறுவடை சீசன் முடிவடைவதால், விவசாயப் பணிகளுக்கும் மின் தேவை அதிகமாகும். இது சராசரியாக தினசரி 500 மெகாவாட் பற்றாக்குறையை உருவாகும். எனவே தான் இந்த மின்வெட்டு திட்டம் கொண்டு வரப்படுகிறது.” என்று GUVNL இன் மூத்த அதிகாரி ” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…