பைக் ரேஸில் ஈடுபட்ட மாணவருக்கு நூதன தண்டனை…. அதிரடி காட்டிய ஐகோர்ட்!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் வார்டு பாய்களுக்கு உதவியாக ஒரு மாதம் பணியாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டான்லி ரவுண்டானாவில் இருந்து மூலகொத்தளத்திற்கு பைக் ரேஸ் செய்ததாக சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பிரவீன் மார்ச் 21ல் கைது செய்யப்பட்டார்.

பைக் ரேசில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை விபத்து அவசர சிகிச்சை பிரிவில் 30 நாட்களுக்கு காலை 8 முதல் மதியம் 12 மணி வரை உதவிபுரிய உத்தரவிட்டுள்ளது.

வார்டில் தினசரி அனுபவம் குறித்து மருத்துவமனை முதல்வருக்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…