தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள சொத்து வரி குறைவா?… பிற மாநிலங்களில் எவ்வளவு?

தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நடைமுறையில் உள்ள சொத்து வரியானது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநகரங்கள் மற்றும் நகரங்களுடன் ஒப்பிடுகையில் மிகக குறைவாக உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

வரி உயர்வு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசு வரி அதிகரிக்கப்பட்ட பின்னரும், பிற மாநிலங்களை விட இங்கு தான் மக்கள் செலுத்த வேண்டிய வரித் தொகை குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின், 600 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடத்திற்கு தற்போது விதிக்கப்படும் குறைந்தபட்ச சொத்துவரி ரூ.810 ஆரும் சீராய்விற்குப் பிறகு, இது.ரூ.1215 ஆக உயரும். ஆனால், இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டடத்திற்கு மும்பையில் ரூ.2157 ஆகவும், பெங்களூருவில் ரூ.3, 464 ஆகவும், கொல்கத்தாயில் ரூ.3,510 ஆகவும் மற்றும் புனேவில் ரூ.3,924ஆகவும் உள்ளது.

சென்னை மாநகராட்சியில், 600 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடத்திற்கு தற்போது விதிக்கப்படும் அதிகபட்ர சொத்துவரி ரூ.3.240 ஆகும். சீராய்விற்குப் பிறகு. இது: ரூ.4860 ஆக உயரும். ஆனால், இதே பரப்பாரவு கொண்ட குடியிருப்பு கட்டடத்திற்கு, பெங்களூருவில் ரூ.8-660 ஆகயும், கொல்கத்தாவில் ரூ.15.984 ஆகவும், புனேவில் ரூ.17.112 ஆளயும்மற்றும் மும்பையில் ரூ.84.583 ஆகயும் உள்ளது

கோயம்புத்தூர் மாநகராட்சியில் 600 சதும் அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடத்திற்கு தற்போது விதிக்கப்படும். குறைந்தபட்ச சொத்துவரி ரூ.204 ஆகும். சீராய்விற்குப் பிறகு. இது ரூ. 255 ஆக உயரும். ஆனால், இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டடத்திற்கு லக்ளோவில் ரூ-548 ஆகைப், இந்நூரில் ரூ. 1324 ஆகவும் மற்றும் அகமதாபாத்தில் ரூ.2103 ஆகரம் உள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சியில், 600 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடத்திற்கு தற்போது விதிக்கப்படும் அதிகபட்ச சொத்துவரி ரூ.72 ஆகும். சீராய்விற்குப் பிறகு, இது. ரூ1215 ஆக உயரும். ஆனால் இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டடத்திற்கு லக்னோவில் ரூ.2100 ஆகவும், இந்தூரில் ரூ. 2520 ஆகவும் மற்றும் அகமதாபாத்தில் ரூ5.600ஆகவும் உள்ளது என தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.