இலங்கை முழுவதும் 36 மணி நேர ஊரடங்கு….போராட்டத்தை அடக்க இலங்கை அரசு எடுத்த அதிரடி முடிவு..

பொருளாதார நெருக்கடியை குறைக்க  இலங்கையில் அரசுக்கு எதிராக  எதிர் கட்சியினர் மற்றும் மக்கள் அனைவரும் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.போராட்டத்தை கட்டுப்படுத்த தலைநகர்  கொழும்பு மற்றும் சில முக்கிய நகரங்களில்  ஊரடங்கை அமல்படுத்தியது இலங்கை அரசு.

இதை தொடர்ந்து நேற்று இரவு அவசர நிலையை பிரகடனப்படுத்தபட்டுள்ளது. எதிர் கட்சியினர் தற்போது இலங்கை அரசுக்கு எதிராக  மக்கள் நாளை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் இலங்கை முழுவதும் 36 மணி நேர  ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளார் அதிபர் கோத்தபய ராஜபக்சே.இதனால் இலங்கையில் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என இலங்கை அரசு  அறிவித்துள்ளது.

போராட்ட நிலைமையை சரி செய்யவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் அமைதியை பாதுகாக்கவும், இலங்கை அரசுக்கு எதிராக நடக்கும்  போராட்டங்களை குறைக்கவும்  இந்த  ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது என அதிபர் கோத்தபய ராஜபக்சே விளக்கம் அளித்து உள்ளார்.

பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என அனைத்தும் குறைந்த விலையில் கிடைக்க  விரைவில்  நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published.