பாஜக-வின் 42வது நிறுவன தினம்  – எம்.பி-களுக்கு அறிவுரை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி

இன்று பாரதிய ஜனதா கட்சியின் 42-வது ஆண்டு விழாவையொட்டி டெல்லியில் உள்ள தலைமைசெயலகத்தின் முன்பிருக்கும்  கட்சி கொடியை ஏற்றி வைத்தார் ஜே.பி நட்டா. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பாஜக எம்.பிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதையடுத்து கட்சியின் நிறுவன தினத்தை முன்னிட்டு நாளை (ஏப்ரல்.7) முதல் சமூக நீதிக்கான 15 நாட்கள் கடைப்பிடிக்கப்படுவதால் இந்த தினங்களில் மக்கள் சேவையில் ஈடுபடுமாறும் எம்பிக்களை பிரதமர் அறிவுறுத்தினார்.

இது குறித்து செய்தியாளர் சந்திப்புகளில் பேசிய  பிரகலாத் ஜோஷி, ஒன்றிய அரசின் இலவச ரேஷன் திட்டம், கொரோனா தடுப்பூசி திட்டம், ஆயுஷ்மான் பாரத், ஜன ஆஷாதி கேந்திரா உள்ளிட்ட திட்டங்களை பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளை எம்பிக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.