ஐ.நா.வின் பாதுகாப்பு சபையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆவேசம்..!

ரஷ்யா- உக்ரைன் இடையே நடந்த போரில், ரஷ்யா ராணுவ படைகள் உக்ரைன் மக்களை மிக கொடூரமாக கொன்று குவித்துள்ளனர். பெண்கள், குழந்தைகள் என பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும்  கொடூரமாக தாக்கியுள்ளதை மிக வன்மையாக கண்டிக்கிறேன் என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். 

ஐக்கிய நாடுகள் அவையில் காணொளி  காட்சி வாயிலாக  கலந்து கொண்ட அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவை சர்வதேச நீதி அமைப்பு முன்பு நிறுத்த வேண்டும். அது மட்டுமின்றி  உடனடியாக ரஷ்யாவை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் பதவியில் இருந்து  நீக்க வேண்டும். இல்லையெனில் ஐ.நா.அவையை இழுத்து மூடிவிடுங்கள் என ஆவேசமாக பேசினார். 

மேலும் உலக நாடுகளுக்கு பாதுகாப்பு குறித்து  ஐ.நா.பாதுகாப்பு சபையில் அளிக்கப்பட்ட உத்தரவாதம் எங்கே போனது என்றும் செலன்ஸ்கி கேள்வி எழுப்பியுள்ளனர். ரஷ்ய ராணுவத்தின் இந்த கொடூர செயலுக்கும், ஐஎஸ்ஐ தீவிரவாதிகளும் எந்த வித்தியாசமும் இல்லை என ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். 

எதிர்காலத்தில், உலக போர்களில் இது மிகவும் மோசமானதாக பார்க்கப்படும். குறிப்பாக புச்சா நகரில் ரஷ்ய ராணுவத்தால் சுமார் 400 க்கும்  மேற்பட்ட பொதுமக்களை கொன்றதற்கு ரஷ்யா பதில் சொல்லியே ஆக வேண்டும்.  என அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.