சம்மர் விசிட் எங்க போலாம்.. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 3 பேர் பயணம்..

உலகின் பெரும் பணக்காரர்கள் வணிக ரீதியான பயணம் என்ற முறையில் உலகம் முழுக்க சுற்றி வருவது வழக்கம். உலகை சுற்றியது போதும் என்று தற்போது அதையெல்லாம் தாண்டி 3 பெரும் பணக்காரர்கள் சுமார் 1,250 கோடி ரூபாய் செலவு செய்து ஸ்பேஸ் எக்ஸ் என்ற ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளார்கள்.
அந்த 3 பணக்காரர்களான, அமெரிக்காவின் ஓஹியோ சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் லாரி கன்னோர், இஸ்ரேல் தொழிலதிபர் எய்டன் ஸ்டிப்பே, கனடாவைச் சேர்ந்த முதலீட்டாளர் மார்க் பதி ஆகியோர், நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் மைக்கேல் லோபஸ் அலெக்ரியா தலைமையில் நேற்று இரவு கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளார்கள்.
இதற்காக ஒவ்வொரு பணக்காரரும் சுமார் 418 கோடி செலவு செய்து இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அதாவது சுமார் 10 நாள் பயணத்தில், 8 நாட்கள் விண்வெளி நிலையத்தில் தங்கி அங்கு அறிவியல் சம்பந்தப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ள போகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விண்வெளி ஆராய்ச்சி பயணத்தில் அமெரிக்கா, ரஷ்யா உட்பட 15 நாடுகளுக்கும் மேல் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிபிடித்தக்கது . இந்த சர்வதேச விண்வெளி நிலையம் 1998ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிக்காக பூமியின் சுற்று வட்டப்பாதையில் உருவாக்கப்பட்டதாகும்.