இதெல்லாம் வேற லெவல்..  பாஸ் நீங்க எங்கியோ போய்ட்டீங்க..!! “BMW கார் வழங்கிய நிறுவனம்”..

சென்னையில் இயங்கிவரும் கிஸ் ஃபிளோ (kiss flow ) என்ற ஒரு தனியார் நிறுவனம் தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் 5 ஊழியர்களுக்கு பிஎம்டபிள்யூ சொகுசு காரை வழங்கி ஊழியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்நிறுவனம்  சென்னையில் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் நிறுவனம் தொடங்கிய காலம் முதல் இன்று வரை நிறுவனம் சந்தித்த ஏற்ற, இறக்க நேரத்தில் அயராது உழைத்த ஆதி, விவேக், கெளசிக் ராம், பிரசன்னா, தினேஷ் ஆகிய ஐந்து பேரையும் குடும்பத்துடன் பி.எம்.டபல்யு ஷோரூம் வருமாறு தலைமை செயல் அதிகாரி  சுரேஷ் சம்பந்தம் அழைப்பு விடுத்துள்ளார்.  விழாவிற்கு வந்தவர்கள் யாரும் எதிர்பார்க்காத நிலையில் அந்த 5 பேருக்கும்  சொகுசு காரை  பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சுரேஷ் சம்பந்தம்.

இதுகுறித்து அவர் பேசுகையில்,  நிறுவன துவங்கிய நாள்  முதல் தற்போது வரை என்னோடு பயணித்து வரும் ஊழியர்கள் எந்த சூழ்நிலையிலும் நிறுவனத்தை விட்டு செல்லாமல்,  மற்ற நிறுவனத்தில் அதிக ஊதியம் தருவதாக கூறியும் என்னை விட்டு செல்லாமல் தொடர்ந்து உழைத்தனர். அதற்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த பரிசு என்று கூறி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.  இந்த  பிஎம்டபிள்யூ சொகுசு காரின் மதிப்பு சுமார் 1 கோடியாகும்.

Leave a Reply

Your email address will not be published.