சென்னை மாநகராட்சி நிதி நிலை அறிக்கையின் ஹைலைட்ஸ்

6 ஆண்டுகளுக்கு பிறகுநேற்று நடைபெற்ற சென்னை மாநகராட்சியின் நிதி நிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகளின் ஹைலைட்ஸ் .

  • கடந்த நிதி ஆண்டில் 16,500 எண்ணிக்கையிலான நெகிழி குப்பை தொட்டிகள் ரூபாய் 2.90 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
  • இந்த நிதியாண்டில் ஒவ்வொரு மாதமும் 100 மெட்ரிக் டன் அளவில் மொத்தம் 1200 மெட்ரிக் டன் உரம் தமிழ்நாடு கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படும்
  • 2.40 கோடி செலவில் 3 வீடற்றவர்களுக்கான காப்பகம் உருவாக்கப்படும்.
  • கவுன்சிலருக்கு வார்டு மேம்பாட்டு நிதி 30 லட்சத்தில் இருந்து 35 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 200 வார்டுகளுக்கு ரூ. 70 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
  • மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரூ. 5.47 கோடி மதிப்பில் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகளை வழங்க ரூ. 6.91 கோடி ஒதுக்கீடு.
  • நிர்பயா நிதியின் கீழ், ரூ. 23.66 மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா நாப்கின் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மாணவர்கள் பாராளுமன்ற நடைமுறைகளை அறிந்து கொள்ள, பேச்சாற்றலை வளர்க்க மாதிரி ஐக்கிய நாடு குழு, நாடாளுமன்ற குழு அமைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….