ட்விட்டர் நிர்வாக குழுவில் இணைய மறுப்பு தெரிவிக்கும் எலான் மஸ்க்..  

உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க்  சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை கைப்பற்றி  அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.  

எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக  செயல்பட்டு வருகிறார். ட்விட்டரில் அதிக பங்குகளை வாங்கிய எலான் மஸ்க்,  ட்விட்டர் பயனாளிகளுக்கு பேச்சுரிமை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதனை  தொடர்ந்து  ட்விட்டரில் எடிட் பட்டன் வேண்டுமா எனவும்  பயனாளிகளிடம்  கேள்வி எழுப்பியிருந்தார். 

எலான் மஸ்க் எழுப்பிய அந்த கேள்விக்கு 2 மணி நேரத்தில் 11 லட்சம் பேர் ட்விட்டர் போலில் (Twitter poll )  வாக்களித்து தங்களின் விருப்பத்தை தெரிவித்தனர். இதில் 75 சதவீதம் பேர் ட்விட்டரில் எடிட் பட்டன் வேண்டும் என தெரிவித்திருந்தார்கள்.  இப்படி அதிரடி காட்டிய எலான் மஸ்க் தற்போது, ட்விட்டர் நிர்வாகக் குழுவில் சேரும் வாய்ப்பை மறுத்துள்ளார் .

சில தினங்களுக்கு முன் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் பேசுகையில், எலான் மஸ்க் ட்விட்டர் நிர்வாக குழுவில் சேர உள்ளதாக அறிவித்தார். ஆனால், தற்போது ட்விட்டர் நிர்வாக குழுவில் எலான் மஸ்க் சேர மாட்டார் என ட்வீட் தெரிவித்துள்ளார். குழுவில் இணைய பலமுறை அவரிடம் கேட்டுப் பார்த்தும், அவர் மறுத்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் நிர்வாக குழுவில் சேர்ந்து பல மாற்றங்களை  செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மஸ்க் எடுத்த முடிவு அதிர்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.