மாறா நாம ஜெயிச்சிட்டோம்.. இந்தியாவில் தயாரான “டோர்னியர்-228 ரக” விமானம்..

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விமானத்தைக் கொண்டு முதல் போக்குவரத்து சேவையானது இன்று தொடங்கப்பட்டு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த விமானம் முழுவதும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் மூலம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் ஆகும்.
டோர்னியர்-228 பெயரிடப்பட்ட இந்த விமானம் முதல் முறையாக தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதற்கு முன்பு இந்தியாவில் போயிங், ஏர்பஸ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் விமானங்களை கொண்டு தான் பயணிகள் போக்குவரத்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விமானத்தை கொண்டு இன்று முதல் போக்குவரத்து சேவையை இந்தியா தொடங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம், முழுவதும் உள்நாட்டு தயாரிப்பில் உருவாகியிருக்கும் விமான சேவை முதன் முதலாக வணிகரீதியான பயன்பாட்டை தொடங்கியுள்ளது.
17 இருக்கைகள் கொண்ட டோர்னியர்-228 ரக விமானம் அசாமின் திப்ரூகர் முதல் அருணாச்சலப் பிரதேசத்தின் பாசிகாட் வரை அலையன்ஸ் ஏர் நிறுவனம் மூலம் வெற்றிகரமாக இயங்கியுள்ளது.

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் அலையன்ஸ் ஏர் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதமே அதேபோல் 17 இருக்கைகள் கொண்ட இரண்டு டோர்னியர் 228 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதாக ஒப்பந்தம் செய்தது இருந்தது.
அதன்படி ஏர்லைன்ஸ் தனது முதல் டோர்னியர் 228 விமானத்தை ஏப்ரல் 7 அன்று பெற்றது. இதைதொடர்ந்து திப்ருகர்-திப்ருகர் வழித்தடத்தில் ஏப்ரல் 18ம் தேதி முதல் வழக்கம் போல் விமானச் சேவை தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே டோர்னியர் விமானங்கள் பாதுகாப்பு படையினர் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.