நான் வீழ்வேன் என்று  நினைத்தாயோ..? ஜெட் ஏர்வேஸ் அடுத்த ஆட்டம் ஆரம்பம்..

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடன் தொல்லையால் கடந்த 2019-ஆம் ஆண்டு தன்னுடைய சேவையை நிறுத்தியது. கடன் பிரச்சனை காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வெளிநாடு வாழ் இந்தியர்களான ஜலான் மற்றும் லண்டனை சேர்ந்த கல்ராக் கேபிடல் ஆகியோரிடம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமானது ஒப்படைக்கப்பட்டது. 

இந்த குழுமம் சுமார் ரூ,1350 கோடி ரூபாயை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய போவதாக தெரிவித்த நிலையில் இந்நிறுவனம் தற்போது மீண்டும் செய்யப்பட போவதாக  நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சஞ்சீவ் கபூர் தெரிவித்துள்ளார். 

அதன்படி ஏப்ரல் மாத இறுதியில் விமான நிறுவனம் செயல்படுவதற்கு தேவையான அனுமதி கிடைத்துவிடும் என்றும் இந்த அனுமதிகான இறுதி கட்டத்தில் தற்போது நாங்கள்  இருக்கிறோம் என்றும் தெரிவித்தார். 

அனுமதி கிடைத்த பிறகு அக்டோபர் மாதத்தில் இருந்து செயல்படத் தொடங்கி விடுவோம் என்றார். தற்போது நிறுவனத்தில் 200 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.  அதில் மூன்றில் இரண்டு பங்கு பணியாளர்கள் ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில்  பணியாற்றியவர்கள். அதே போல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இதற்கு முன் பணியாளர்கள் விருப்பப்பட்டால் அவர்களையும்  வேலைக்கு எடுக்க பரிசீலனை செய்வோம் என்றும் கூறினார். 

தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் எகானமி கிளாஸ் மற்றும் பிசினஸ் கிளாஸ் என இரு வகையான வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க போவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக செயல்பட்ட  விபுலா குணதிலகா என்பவர், தற்போது  ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தது.

Leave a Reply

Your email address will not be published.

கோவில்களே மசூதிகளாக மாற்றப்பட்டுள்ளது – கர்நாடக பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா குற்றச்சாட்டு

தற்போது இந்தியாவில் மிக பெரிய சர்ச்சையாக போவது மசூதி உள்ள இடத்தில் கோயில்…