இந்தியாவில் அதிகரித்த சில்லறை விலை பணவீக்கம்.. எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி.. 

கடந்த மார்ச் மாதத்திற்கான விலைவாசி புள்ளி விவரங்களை மத்திய புள்ளியியல் அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி மார்ச் மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் மதிப்பானது   6.07% இருந்து 6.95% ஆக  உயர்ந்துள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

இந்த பணவீக்கம் கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது  என தெரிவித்துள்ளது.  இந்தியாவை பொறுத்த வரை சில்லறை பணவீக்கத்தை 2 % இருந்து  6 % க்குள் வைத்திருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி இந்திய அரசுக்கு  உத்தரவிட்டுள்ளது. இல்லையெனில் இந்தியா எதிர் வரும் காலங்களில் பொருளாதார நெருக்கடியை  சந்திக்க நேரிடும் என அரசை எச்சரித்துள்ளது. 

இந்த பணவீக்கத்திற்கு சமையல் எண்ணெய், காய்கறி விலை,  இறைச்சி என அனைத்து உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்ததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

அதாவது சமையல் எண்ணெய் விலையில் 18.8%, ஆகவும், காய்கறிகள் விலையில் 11.6% ஆகவும் உயர்ந்துள்ளது. இறைச்சி தொடங்கி ஆடைகள் வரை அனைத்தும் உயர்ந்துள்ள நிலையில் அதைத் தாண்டி காலணிகள் பிரிவில் 9.4% ஆக உயர்ந்திருந்ததாக புள்ளியியல் அமைச்சகம் கூறியுள்ளது.இந்த  சில்லறை விலை பணவீக்கம் கிராமப்புறங்களில் 7.7% ஆக இருந்த நிலையில் நகர்ப்புறங்களில் அது 6.1% ஆக மட்டுமே  உயர்ந்துள்ளதாக  அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட காரணங்களால்  உலக சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியே  இந்த விலைவாசி உயர்வுக்கு காரணம் என மத்திய அமைச்சகம் ரிசர்வ் வங்கிக்கு   விளக்கம் அளித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.