இனி பவர் கட் இருக்காது… அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!

கோடைக்காலத்தை எதிர்கொள்ளும் வகையில் சீரான மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோடை காலத்தில் மின்சாரத்தை தடையில்லாமல் வழங்குவதற்கான அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார். சுமார் 4 1/2 லட்சம் விவசாயிகள் இலவச மின்சாரத்திற்க்கு விண்ணப்பித்திருந்த கூறிய அவர், கடந்த 6 மாத காலத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மின் தேவை அதிகமான சூழ்நிலையிலும் தடையில்லாத மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக கூறினார். தேவைக்கு குறைவாக நிலகரி வரும் நிலையில்
மின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் குறுகிய ,நடுத்தர கால ஒப்பந்தம் போடப்பட்டு வருவதாகவும், 2 மாத கோடைக்கால தேவைக்காக தான் நிலக்கரி டென்டர் கோரப்படுவதாக தெரிவித்தார். நிலக்கரி பற்றாகுறையாக இருந்தாலும் சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…