பால் முதல் பசுந்தீவனம் வரை… முத்து முத்தான 36 அறிவிப்புகள் இதோ!

Milk

பால்வளத் துறை புதிய 36 அறிவிப்புகளை பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.

  • பெரம்பலூர் மாவட்டம் வடலூரில் நாளொன்றுக்கு 6 லட்சம் லிட்டர் பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலை 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கத்தில் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் உடைய பால் பண்ணை 71 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்
  • நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தும் பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலை 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் கடலூர் மாவட்ட கூட்டணி உற்பத்தியாளர் ஒன்றியத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட பால் பண்ணை 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்
  • தூய பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 50 எண்ணிக்கையில் தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்
  • கரூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தினால் ஒருத்தர் 50,000 லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட பால்பண்ணை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
  • திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட பால் பண்ணை 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்
  • தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய அலுவலகக் கட்டிடங்கள் கட்டித் தரப்படும்
  • ஈரோடு கால்நடை தீவன தொழிற்சாலையில் ஆயிரத்து 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்
  • அண்ணாமலை இணைய பால்பண்ணையில் புதிய பால் பொருட்கள் தயாரிக்கும் வசதிகள் 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்
  • செயற்கை முறைக் கருவூட்டல் வசதிகளை வலுப்படுத்த 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 திரவ நைட்ரஜன் 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும்
  • கறவைப் பசுக்களின் இனவிருத்தி திறனை மேம்படுத்த சினைத்தருண ஒருங்கிணைந்த முறை 50 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்
  • பிரதமர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் ஒன்றிய அலுவலர்கள் மற்றும் இணையத்தில் பணியாற்றும் அலுவலர்கள் திறனை மேம்படுத்துவதற்காக மாதவரத்தில் 500 நபர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி 50 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்
  • பால் கொள்முதல் பதப்படுத்துதல் மற்றும் விற்பனை பணிகளை கணினி மயமாக்கல் திட்டம் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்
  • அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு கருவிகளுக்கான பசுந்தீவன உற்பத்தியினை மேம்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட நவீன திட்டம் 50 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்
  • கறவைப் பசுக்களின் என்ன விருத்தி அதிகரிக்கும் வகையில் உதகமண்டலம் ஜெர்சி பொலிகாளை பண்ணைக்கு 120 ஜெர்சி கலப்பின காளைகள் கன்றுகள் 46 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்
  • பால் பண்ணைகளில் நுகர்வோர் நலன் கருதி ஒருங்கிணைந்த தரச்சான்று பெற 25 லட்சம் ரூபாய் செலவிடப்படும்
  • தமிழ் மொழி கல்வி இயல் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பால் உற்பத்தியாளர்களின் வாரிசுகளுக்கு பரிசு தொகை வழங்கி விடுவிக்கப்படுவார்கள்
  • 4 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களுக்கு நடமாடும் கறவை இயந்திரங்கள் 20 எண்ணிக்கையில் 13 லட்சம் மதிப்பீட்டில் முன்னோடி திட்டமாக வழங்கப்படும்
  • பரிந்துரை சமர்ப்பிக்க குழு அங்கு ஆவின் நிறுவனத்தின் நீண்டகால நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசும் வழங்கி கௌரவிக்கப் படுவார்கள்.
  • நுகர்வோர் தேவையை கருதி 10 வகையான புதிய பால்பொருட்கள் அறிமுகப்படுத்தப்படும்
  • பால் உற்பத்தியாளர்களின் பறவைகளுக்கு தடையின்றி கால்நடை தீவனம் மற்றும் தாது உப்பு கலவை வழங்க ஏதுவாக ஒருங்கிணைந்த தீவன கண்காணிப்பு மையம் அமைக்கப்படும்
  • பால் உற்பத்தியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு பால் பணம் பட்டுவாடா முறையை தாமதமின்றி வழங்கிட ஒன்றுபட்ட பால் பணம் பட்டுவாடா முறை நடைமுறைப் படுத்தப்படும்
  • வணிகவளாகம் ஆகியவை உள்ளடக்கி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பால் பண்ணை பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை பெறப்பட்டு செயல்படுத்தப்படும்
  • பால் உற்பத்தியாளர்கள் நலன்கருதி பால் உற்பத்தியாளர்களுக்கு அனைத்து இறப்புகளுக்கும் இறுதிச்சடங்கு செலவு 5000 ரூபாய் வழங்கப்படும்
  • தொடக்க பால் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ஊதிய நிர்ணயம் பணி வரன்முறை போன்ற பலதரப்பட்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்து பரிந்துரை சமர்ப்பிக்க குழு அமைக்கப்படும்
  • திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்படும்
  • கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும்
  • வளசரவாக்கத்தில் உள்ள ஆவினுக்கு சொந்தமான இடத்தில் நபார்டு மற்றும் NABCONS ஆலோசனை நிறுவனம் மூலமாக அனைவரின் பயன்பாட்டிற்கான பயிற்சி மையம் பல்நோக்கு வணிக வளாகம் ஆகியவை உள்ளடக்கிய ஆவின் வர்த்தக மையம் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்
  • தமிழ்நாட்டில் பால்வள மேம்பாடு மற்றும் ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தேவையான பால் கொள்முதல் பதப்படுத்துதல் மற்றும் விற்பனை போன்ற செயல்பாடுகளுக்கான குறுகிய கால இடைக்கால நீண்டகால திட்டங்கள் வகுக்கப்பட்டு ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டங்கள் NCDFI மற்றும் IRMA மூலமாக செயல்படுத்தப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *