ஹெச் 1 பி விசா பெறுவதில் இந்தியர்கள் முதலிடம்..

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு குறிப்பாக  அமெரிக்காவிற்கு வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் தாக்கத்தால் பலர் வெளிநாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது உலக முழுக்க கொரோனாவின் தாக்கம் குறைத்த நிலையில் மக்கள் மீண்டும் வெளி நாடுகளை நோக்கி வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர்.   

இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவிற்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அமெரிக்காவின் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள இந்த தரவுகள் இந்தியர்களின் ஆதிக்கத்தைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது. ஹோம்லேண்ட் செக்யூரிட்டி வெளியிட்டுள்ள தகவல் அடிப்படையில், 2021ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்க அரசு அளித்த ஹெச் 1 பி விசாவில் பெரும் பகுதியை  இந்தியர்கள் கைப்பற்றியுள்ளதாக  தெரிய வந்துள்ளது. 

கடந்த ஆண்டு மட்டும் சுமார் 4.07 லட்சம் ஹெச்1பி விசா விண்ணப்பங்கள் ஒப்புதல் பெற்றுள்ளது. இது 2020ஆம் ஆண்டின் 4.26 விசா விண்ணப்பத்தை விடவும் குறைவு என்றாலும் தொடர்ந்து 4 லட்சத்திற்கு மேல் உள்ளது  பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

இப்படி 2021ஆம் ஆண்டில் ஒப்புதல் பெற்ற 4.07 லட்சம் விண்ணப்பத்தை  தேர்வு செய்து  அமெரிக்காவின் USCIS  அமைப்பு ஹெச்1பி விசா அளித்துள்ளது. இதில் 74 % விசாக்களை இந்தியர்கள் மட்டுமே பெற்றுள்ளனர். 

இந்தியாவை தொடர்ந்து சீனா சுமார் 12.4 % விசாவை பெற்றுள்ளனர். 2021ல் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள 4.07 லட்சம் ஹெச்1பி விசா விண்ணப்பத்தில் சுமார் 2.80 லட்சம் விண்ணப்பம் ஐடி துறையை சார்ந்து உள்ளது என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *