தனி நீதிபதி கருத்தால் காவலர்களுக்கு மன உளைச்சல்… ஒரே போடாய் போட்ட டிஜிபி சைலேந்திரபாபு… ஐகோர்ட் அதிரடி ஆணை!

chennai high court

காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளதாக தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்களை நீக்கியது இரு நீதிபதிகள் அமர்வு.

நில விற்பனை தொடர்பாக அளித்த புகார் தவறான புகார் என முடித்து வைத்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி வேல்முருகன் கருத்துகள் நீக்கம்

ஊழல்வாதி அதிகாரிகளை களைந்து, திறமையற்றவர்களுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டிய நேரம் எனவும் தெரிவித்திருந்தும்,

எதிர்மறை கருத்துக்களை நீக்கக்கோரி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

நீதிபதிகள் பிரகாஷ், நக்கீரன் அமர்வு உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து பின்பு ,வழக்கின் எல்லைக்கு அப்பாற்பட்டு, இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்து இருப்பது சட்டத்தின்படி ஏற்கத்தக்கதல்ல என டிஜிபி சைலேந்திர பாபு தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதுபோல கருத்துக்கள் உயிரை பணையம் வைத்து பணியாற்றக்கூடிய காவல் துறையினர் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தும் என்றும் டிஜிபி தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தனி நீதிபதியின் கருத்துக்களை நீக்க உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *