மின்சார வாகன உற்பத்தியில் அதிக முதலீடு செய்யும் டொயோட்டா குழுமம்..!!

இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தியில் பல முன்னணி  நிறுவனங்கள் கால்பதித்த நிலையில் டொயோட்டா குழுமம்மின்சார வாகன உற்பத்தி மற்றும் உதிரி பாகங்களை உற்பத்தி செய்ய சுமார் 4,800 கோடி ரூபாயினை முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

டொயோட்டா குழுமத்தை சேர்ந்த டொயோட்டா கிர்லோஸ்கர் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் ஆட்டோ பார்ட்ஸ் நிறுவனங்கள் அதன் உற்பத்தியை அதிகரிக்கவும்,  உதிரி பாகங்கள் உற்பத்தியை மேம்படுத்த போவதாக தெரிவித்துள்ளது. இதற்கான இந்த குழுமம் கர்நாடக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த முதலீடானது எரிபொருள் தேவையை குறைத்து நாட்டின் பசுமை தொழில் நுட்பங்களை ஊக்குவிக்கும் நோக்கில் செய்யப்பட்டுள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தவிர மாநிலத்தின் உற்பத்தியை மேம்படுத்தும், வேலை வாய்ப்பினையும் அதிகரிக்கும் மின்சார வாகன உற்பத்தி அதிகரிக்கும் என்றனர். இந்த முதலீட்டின் மூலம் மின்சார வாகன உற்பத்தியை மேம்படுத்துவதோடு, உதிரி பாகங்கள் உற்பத்தியையும் அதிகரிக்க முடியும் என்றனர்.

மேலும் இது உள்நாட்டிலேயே மின்சார வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் கிடைக்க வழிவகுக்கும். இது இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தியை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பேசுகையில் கர்நாடகா மாநிலம் சர்வதேச அளவிலான சப்ளை சங்கிலியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. மேலும் கர்நாடகா பெரும் உற்பத்தி நகரமாக மாற வேண்டும். அதற்கு டொயோட்டா குழுமத்துடன் ஒப்பந்தம் செய்து  முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…