இனி நாங்களே பார்த்துக்குறோம்… ஒன்றிய அரசுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு!

Modi

இனி நகர்ப்பகுதிகளின் ஊடாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளின் சீரமைப்புப் பணிகளை மாநில அரசே மேற்கொள்ள அனுமதி வேண்டி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டதாகவும், மத்திய அரசின் அனுமதியைப் பெற்று, மாநில அரசே பணிகளைத் தொடங்கும் என்றும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினாக்கள் – விடைகள் நேரத்தில் எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய பொதுப்பணி & நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அணைக்கட்டு தொகுதி, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், விரிஞ்சிபுரத்தில் பழுதடைந்த பாலாறு தரைப் பாலத்துக்கு மாற்றாக புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளை 2022-23-ம் ஆண்டில் மேற்கொள்ள கருத்துரு தயார் செய்யப்பட்டு அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும், முன்னுரிமை அடிப்படையில் விரைந்து பணிகளை முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சென்னை – பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளிகொண்டாவில் 7 கி.மீ., தூரத்துக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாகவும்,
நில எடுப்புப் பணிகளுக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

விக்கிரவாண்டி – தஞ்சாவூர் சாலை மோசமான சூழலில் இருப்பதால், அதை சீரமைக்கும் பணிகள், 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும், வட மாநிலத்தைச் சேர்ந்த படேல் Infrastructure நிறுவனம் தான் பணிகளை மேற்கொண்டுவருவதாகவும், சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி NHAI-க்கு கடிதம் எழுதப்பட்டள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டதாகவும், இனி நகர்ப்பகுதிகளின் ஊடாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளின் சீரமைப்புப் பணிகளை மாநில அரசே மேற்கொள்ள வேண்டி, மத்திய அரசிடம் கடிதம் தரப்பட்டதாகவும், மத்திய அரசின் அனுமதியைப் பெற்று மாநில அரசே நகர்ப்பகுதிகளில் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளின் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *