தீ பிடிக்கும் ஓலா வாகனம்..!! தெறித்து ஓடும் ஓலா நிர்வாக அதிகாரிகள்..!!

இந்தியாவில் சமீபத்தில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தீ பிடித்து எரிவது அதிகரித்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் ஒன்றிய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனம் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் இது போன்ற சம்பவம் ஒன்றிய அரசையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இந்தத் தீ விபத்துக்கு என்ன காரணம் என எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகிறது. இந்த தீ விபத்தால் ஓலா நிறுவனத்தின் வர்த்தகம் அதிக அளவில் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இது போதாதுன்னு ஓலா நிறுவனத்திற்கு தற்போது பெரிய சிக்கல் ஏற்பட தொடங்கியுள்ளது.

ஓலா நிறுவனம் மிகப்பெரிய பிரச்சனை எதிர்கொண்டு வேளையில் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் பதிவை விட்டு வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் ஓலா ஸ்கூட்டர் தீ விபத்துக்கு பின் ஓலா குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பாவிஷ் அகர்வால் தனது சிஇஓ பதவியை விட்டு வெளியேறி டெக் பிரிவில் முழு நேரம் பணியாற்ற முடிவு செய்துள்ளார்.
பாவிஷ் அகர்வால் தனது பணிகளை டெக் துறையில் மேற்கொள்ளத் தொடங்கிய பின்பு அவரை தொடர்ந்து மேலும் பல உயர் அதிகாரிகள் தங்களின் பதவியை விட்டு வெளியே வருவது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. அந்த வகையில் பொறியியல் செயல்பாடுகளைக் கையாண்ட தினேஷ் ராதாகிருஷ்ணன் மற்றும் ஓலா காரின் தலைமை நிர்வாக அதிகாரி அருண் சின் தேஷ்முக் போன்றோர் பதவி விலகியதால் ஓலா குழுமத்தின் நிர்வாகமே தற்போது நிலைகுலைந்து உள்ளது.